தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சத்தீஸ்கரில் ஐந்து நக்சல்கள் கைது! - நக்சல்கள்

நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று (ஏப். 28) ஐந்து நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.

குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 5 நக்சல்கள்
குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 5 நக்சல்கள்

By

Published : Apr 29, 2021, 7:05 PM IST

சத்தீஸ்கரில் நேற்று (ஏப். 28) ஐந்து நக்சல்களை நாராயண்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் சோன்பூர் பகுதியில் பல்வேறு குண்டுவெடிப்பு (ஐஇடி) உள்பட பல குற்றங்களில் ஈடுபட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பில் ஈடுபட்ட ஐந்து நக்சல்களின் பெயர்கள்,

  • சுக்ரம் குமெட்டி,
  • நர்சிங் போயம்,
  • சிபோரம் போயம்,
  • கோன்சுரம் போயம்,
  • மங்லூரம் போயம் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய காவல் மூத்தக் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) நீரஜ் சந்த்ரகர் கூறுகையில்,

'கடந்த நான்கு நாள்களில் வெற்றிகரமாக 15 நக்சல்களை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் ஐஇடி குண்டுவெடிப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த குண்டுவெடிப்பில், இந்தோ திபெத்திய எல்லை காவல் துறை அலுவலர் (ஐடிபிபி) ஒருவர் உயிரிழந்தார். விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்டதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். மேலும், நாங்கள் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்' என்று காவல் மூத்தக் கண்காணிப்பாளர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details