திருவனந்தபுரம் (கேரளா) : கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பிலிருந்து இந்தியா மெல்ல மீண்டுவரும் நிலையில், கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் தலைதூக்கியுள்ளது.
ஏற்கெனவே 23 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு பதிவான நிலையில், இன்று (ஜூலை 15) மேலும் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இவர்களில் இரண்டு பேர் ஆனையரா பகுதியைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள மூவர் குன்னுக்குழிபட்டோம், கிழக்கு கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறினார்.