ஜலந்தர் (பஞ்சாப்):பாஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அவதார் நகர் குடியிருப்பு காலனியில் உள்ள வீட்டில் நேற்று (ஆக். 08) இரவு ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த வீட்டின் உரிமையாளர் யஷ்பால் கய், பாஜக பிரமுகர் என கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் யஷ்பாலின் மருமகள் ருச்சி, ஒரு சிறுவன் மற்றும் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கு வந்த பாஜக தலைவர் அசோக் சரீன் ஹிக்கி, “வீட்டில் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் குளிர்சாதன பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டு கம்பரசர் வெடித்ததில் வீட்டில் வேகமாக தீ பரவி உள்ளது.