தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரில் பயங்கரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீ விபத்தில்உயிரிழப்பு - தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

பாட்னா: சலாம் காலனியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நான்கு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
Five members of a family die in fire accident in Bihar

By

Published : Mar 15, 2021, 7:23 PM IST

பிகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம் சலாம் காலனியில் உள்ள வீடு ஒன்றில் இன்று(மார்ச்.15) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் 3 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் வீட்டின் உரிமையாளர் நூர் ஆலம் மற்றும் அவரது நான்கு குழந்தைகளும் தீயில் கருகி உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் நூர் ஆலாமின் மனைவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:கணவர் கூறிய அந்த வார்த்தை: மனைவி தற்கொலை?

ABOUT THE AUTHOR

...view details