ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம், சாய்பாஸா மாவட்டத்தை அடுத்த சார்ஜன்புரு வனத்தை ஒட்டிய பகுதியில் நக்சலைட் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தேடுதல் வேட்டையில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஈடுபட்டனர். டோன்டோ காவல் நிலைய எல்லைப் பகுதிக்குள் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சோதனையில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக ஐ.இ.டி வகை குண்டு வெடித்து சிதறியது.
இதில் வீரர்கள் 5 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். படுகாயங்களுடன் தவித்த வீரர்களை மீட்டு அருகில் உள்ள சிகிச்சை மையத்தில், அனுமதித்து முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் ராஞ்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.