ஆலப்புழா:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தின் கேண்டீனில் வேலை பார்த்து வரும் ஊழியர்கள், திருமண நிகழ்ச்சிக்காக காரில் ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த கார் இன்று (ஜனவரி 23) அதிகாலை 1.30 மணியளவில், கார் ஆலப்புழாவின் ஆம்பலப்புழா அருகில் வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதியது.
கேரளாவில் இஸ்ரோ ஊழியர்கள் 5 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலம் ஆலப்புழாவில் கார் விபத்தில் சிக்கிய 5 இஸ்ரோ ஊழியர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காரில் சென்ற 5 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், படுகாயங்களுடன் இருந்த ஒருவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார். இதனிடையே லாரி ஓட்டுநரை கைது செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆலப்புழா மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஒடிசாவில் பாலத்தில் இருந்து கவிழ்ந்த பேருந்து - 2 பெண்கள் உயிரிழப்பு