உத்தரப் பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது.
யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து- 5 பேர் உயிரிழப்பு...! - யமுனா அதிவேக நெடுஞ்சாலை கார் விபத்து
லக்னோ: கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Yamuna Expressway
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்த ஒரு மணி நேரம் கழித்து காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.