புதுச்சேரி:புதுச்சேரியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர். இதனிடையே படகுகளுக்கு டீசலுக்கு லிட்டருக்கு ரூ.11 மானியமாக வழங்கப்பட்டுவந்த நிலையில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு தற்போது ரூ.1 மானியமாக வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 17) டீசல் மானியம் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட படகு உரிமையாளர்கள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.