தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊருக்குள் புகுந்த கடல் - சாலைக்கு வந்த மீனவர்கள்..! - நடுக்குப்பம் மீனவர்கள்

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் முன் வளைவு அமைக்கவில்லை என குற்றம்சாட்டி நடுக்குப்பம் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

புதுச்சேரியில் மீனவர்கள் சாலை மறியல்
புதுச்சேரியில் மீனவர்கள் சாலை மறியல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 3:55 PM IST

புதுச்சேரியில் மீனவர்கள் சாலை மறியல்

புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தின் கோட்டகுப்பத்துக்கு அடுத்துள்ள நடுக்குப்பம் மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் முன் வளைவு அமைக்கவில்லை என குற்றம்சாட்டி மறியலில் ஈடுபட்டனர். மீனவர்கள் தங்களது பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்கு தூண்டில் முன் வளைவு அமைக்க வேண்டும் என்று 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இதற்கு தீர்வு காணாத பட்சத்தில் தற்போது கடல் சீற்றமாக இருப்பதால் ஊருக்குள் கடல் நீர் வருகிறது. மேலும் 100க்கும் மேற்பட்ட படகுகளை பாதுகாப்பாக வைக்க இடம் இல்லை என குற்றச்சாட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மீனவர்களிடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து போலீசார் மீனவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் போலீஸாருக்கும் மீனவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சில மீனவர்களை போலீசார் கைது செய்து சென்றனர்.

”மீனவர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம் இருப்பினும் இந்த நேரத்தில் தான் எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க முடியும். மேலும் இனியும் இப்பகுதியில் தூண்டில் முன்வளைவு அமைக்கவில்லை என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலை இப்பகுதி மக்கள் புறக்கணிப்பார்கள். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற அரசு ஆவணங்களை அரசிடம் ஒப்படைப்போம்” என போராட்டம் நடத்திய மீனவர்கள் எச்சரித்தனர்.

இதையும் படிங்க:மிக்ஜாம் புயல்: ஆபத்தை உணராமல் புதுச்சேரி கடலில் சுற்றுலா பயணிகள் ஆனந்த உலா!

ABOUT THE AUTHOR

...view details