புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் 8 சுற்றுலாப்பயணி படகுகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படகு அரிக்கமேடு பகுதியில் இருந்து தொடங்கி, மாங்குரோவ் காடுகள் வழியாகச் சென்று தேங்காய்திட்டு துறைமுகப் பகுதியில் வந்தடைகிறது. இந்த நிலையில், அரசு அனுமதியின்றி சுமார் 20க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனைக் கண்டித்து, தொழில்புரிவு மீனவர் அமைப்பு மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்ட படகுகளை நடுக்கடலில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், "தேங்காய் திட்டு துறைமுகப் பகுதியில் 500க்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். சுற்றுலாப் பயணி படகுகளால் மீன்வளம், எறா உற்பத்தி குறைந்துள்ளது. அதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.