புதுச்சேரியில் உள்ள குபேர் மீன் அங்காடியில் நாள்தோறும் மீன் பிடித்துறைமுகங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை காலை நேரத்தில் ஏலம் விடுவதற்கு விதிக்கப்பட்ட தடையைத் திரும்பப் பெறக் கோரி, இன்று (செப்.29) சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் நேரு வீதி மற்றும் காந்தி வீதி சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல், போக்குவரத்து பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் சமாதானம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்தனர்.