மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போவாய் பகுதியில் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவன், குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. தொடர்ந்து அவர் மும்பை ஐஐடியில் முதலாம் ஆண்டு பி.டெக் கெமிக்கல் படித்து வந்த தர்ஷன் சோலங்கி (18) என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவனை, முதலில் விடுதி காவலர் பார்த்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.