முதற்கட்ட விசாரணையில் அனன்யா தற்கொலை செய்துகொண்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். அனன்யா ஏற்கனவே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் செய்த பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையால் பல உடல்நலப் பிரச்னைகளை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஒரு தனியார் மருத்துவமனை, மருத்துவர் மீது கடுமையான புகார்களை முன்வைத்தார். அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஒரு ஆண்டு கழித்தும் கடுமையான வலி காரணமாக தான் வேலை செய்யமுடியாமல் போனதாகத் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் மருத்துவமனை அலட்சியம் காட்டியதாக கூறி புகார் அளித்து நீதி கேட்டு போராடியுள்ளார்.
கேரளா தேர்தல்:
கேரளாவில் ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பி. கே. குஞ்சலிகுட்டியை எதிர்த்து அனன்யா போட்டியிட்டார். கேரளாவிலேயே தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை என்ற மதிப்பை அனன்யா பெற்றுள்ளார்.
ஜனநாயக சமூக நீதி கட்சி சார்பாக வென்காரா தொகுதியில் அனன்யா போட்டியிட்டார். தனது கட்சி தலைவர்களே தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் எனக் கூறி தேர்தலுக்கு முந்தைய நாள் தனது பரப்புரையை நிறுத்தினார்.
தனது கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் பகிரங்கமாக கூறினார். இவர் தற்கொலை விவகாரம் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:முன்னாள் முதலமைச்சர் கல்யான் சிங் கவலைக்கிடம்