தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்! - Transgender

கொல்கத்தாவில் முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் நடைபெற்றுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்!
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்!

By

Published : Jul 4, 2022, 10:34 PM IST

மேற்குவங்கம்:கொல்கத்தாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான அபிஷேக் ராய், தனது நீண்ட நாள் ஆசை காதலரான குருகிராமில் வசிக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டர் சைதன்யா ஷர்மாவை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

இத்திருமண விழா, சென்ட்ரல் கொல்கத்தா ஹோட்டலில் முறையான பெங்காலி சடங்குகளுடன் நடைபெற்றது.

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம்!

இந்நிகழ்வில், பிரபல மேக்கப் கலைஞர் அனிருத்தா சக்லதார், பிரபல நடனக் கலைஞர் தனுஸ்ரீ ஷங்கர் மற்றும் அவரது மகள் ஸ்ரீநந்தா ஷங்கர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தின் மூலம், கொல்கத்தா முதல் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை பதிவு செய்துள்ளது.

அதேநேரம், இந்தியாவில் இன்னும் ஒரே பாலின திருமணம் சட்டப்பூர்வமாக இல்லை. இதனால் தங்களது திருமணம், மற்ற ஓரினச்சேர்க்கை ஜோடிகளுக்கு தைரியத்தை அளிக்கும் என அபிஷேக் - சைதன்யா இணையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:காதலியின் திருமண விழாவில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details