தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் 'கழுதைப்பண்ணை' திறப்பு! - இந்தியாவில் கழுதைப்பண்ணை எங்கு உள்ளது

கர்நாடகா மாநிலம், பண்ட்வால் பகுதியில் கழுதைகளுக்கென்று பிரத்யேக பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 'கழுதைப்பண்ணை' திறப்பு
கர்நாடகாவில் 'கழுதைப்பண்ணை' திறப்பு

By

Published : Jun 12, 2022, 5:32 PM IST

மங்களூரு:கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், பண்ட்வால் பகுதியில் கடந்த ஜூன் 8ஆம் தேதி கழுதைப்பண்ணை தொடங்கப்பட்டது.

42 வயதான பட்டதாரி ஸ்ரீனிவாஸ் கவுடா இந்த கழுதைப்பண்ணையைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து கவுடா கூறுகையில், "நான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். கடந்த 2020ஆம் ஆண்டு அதிலிருந்து விலகி ஐரா கிராமத்தில் 2.3 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, கால்நடை சேவைகள், பயிற்சி மற்றும் தீவன மேம்பாட்டு மையத்தை முதன்முதலில் தொடங்கினேன்.

அதன்பின் தற்போது கழுதைப்பண்ணை தொடங்கியுள்ளேன். பண்ணையில் 20 கழுதைகள் உள்ளன. அதோடு ஆடு, கோழி, முயல்களையும் வளர்த்து வருகிறேன். தொழில்நுட்பங்களின் வருகையால் கழுதைப்பயன்பாடு குறைந்துள்ளது. சுமை சுமக்கக் கூட பயன்படுத்துவதில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கழுதைப் பண்ணை திறப்பது குறித்து பலரிடம் நான் கேட்டபோது முதலில் அவர்கள் என்னை கேலி செய்தார்கள். கழுதைப்பால் சுவையானது, விலை உயர்ந்தது மற்றும் மருத்துவ குணம் கொண்டது.

கழுதைப்பாலை பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன். 30 மி.லி பாக்கெட் ரூ.150 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கழுதைப்பால் அழகு சாதனப் பொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதற்காக ரூ.17 லட்சம் மதிப்புள்ள ஆர்டர்கள் கிடைத்துள்ளன" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் உண்டியல் மே மாத வருமானம் இவ்வளவா...?

ABOUT THE AUTHOR

...view details