கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள நாகர்ஹோல் தேசிய பூங்காவில் நான்கு நாள்களாக முதல் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பொன்னம்பேட்டை வனக்கல்லூரியைச் சேர்ந்த 36 மாணவர்கள், அக்கல்லூரி ஊழியர்கள், 75 பறவைகள் ஆர்வலர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர்.
இக்குழுவினர் 270 பறவையினங்களை தேசிய பூங்காவில் அடையாளம் கண்டு குறிப்பெடுத்தனர். இதில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மலபார் சாம்பல் இருவாச்சி (Malabar grey hornbill), நீலப்பைங்கிளி (Malabar blue winged parakeet) ஆகிய பறவைகள் அடையாளம் காணப்பட்டன. மேலும், மைனா, புல் புல், கழுகுகள் உள்ளிட்ட பல பறவைகள் அங்கு வசித்துவருகின்றன.