தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு- டெல்லியில் பரபரப்பு - நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

firing-in-delhis-rohini-court
நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு- டெல்லியில் பரபரப்பு

By

Published : Sep 24, 2021, 2:31 PM IST

Updated : Sep 24, 2021, 3:50 PM IST

டெல்லி:டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜிதேந்தர் மான் கோகி எனும் ரவுடியை காவலர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இன்று ரோகினி கீழமை நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு- டெல்லியில் பரபரப்பு

அங்கு அவரை தீர்த்துக் கட்ட வழக்கறிஞர் உடையில் தயாராக இருந்த அவருடைய எதிரிகள், சமயம் பார்த்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், கோகி சம்பவ இடத்திலேயே உயிரைவிட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல ரவுடியும் கோகியின் எதிரியுமான சுனிலுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு- டெல்லியில் பரபரப்பு

கோகிக்கும், சுனிலும் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பகை இருந்துவருவதாகவும், இந்தப்பகையினால், 20 பேர் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:அகில பாரதிய அகார பரிஷத் மடாதிபதி தற்கொலையில் சந்தேகம்- வழக்கை விசாரிக்கும் சிபிஐ

Last Updated : Sep 24, 2021, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details