தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்டாசு தயாரிக்கப்பட்ட கட்டடத்தில் வெடிவிபத்து - 5 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்! - சரண் மாவட்டத்தில் வெடிவிபத்து

பீகாரில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்த கட்டடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

firecracker
firecracker

By

Published : Jul 24, 2022, 6:42 PM IST

சரண்: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் குதைபாக் பகுதியில், பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்த கட்டடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டடத்தின் சுவர்கள் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்தது. பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். சடலங்களை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:வீடியோ: கேரளாவில் தண்டவாளத்தை கடக்கும்போது நேர்ந்த விபரீதம்... தாயின் கண் முன்னே உயிரிழந்த மகள்...

ABOUT THE AUTHOR

...view details