ஹைதராபாத் (தெலங்கானா):செகந்திராபாத் செல்லும் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் மின்கசிவு காரணமாக, ஏற்பட்ட தீ மளமளவென்று பரவியது. நான்கு பெட்டிகள் தீயில் முழுவதுமாக சேதம் அடைந்தன. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்து அடர்ந்த புகை வெளியேறியது. ரயில்வே அதிகாரிகள் உரிய நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு, பயணிகளை விரைவாக வெளியேற்றியதால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தெலங்கானா மாநிலம், யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள பகிடிப்பள்ளி மற்றும் பொம்மைப்பள்ளி இடையே இந்தச் சம்பவம் நடந்து உள்ளது. உஷாரான அதிகாரிகள், விரைவாகவும், துரிதமாகவும் மேற்கொண்ட நடவடிக்கைகளால், ரயில் உடனடியாக, அதே இடத்தில் நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில், அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளின் காரணமாக, உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. தீயினால் நான்கு பெட்டிகளும் பலத்த சேதம் அடைந்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.