தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து - 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 5 பேர் பலி! - இரண்டு குழந்தைகள் பலி

துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதில் இருவர் குழந்தைகள் ஆவர்.

fire
fire

By

Published : Oct 3, 2022, 9:43 PM IST

பதோஹி: உத்தரப்பிரதேச மாநிலம், பதோஹி நகரில் துர்கா பூஜையையொட்டி பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் நேற்றிரவு(அக்.2) நடந்த ஆரத்தி நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, மின்கசிவு காரணமாக பந்தலில் தீ விபத்து ஏற்பட்டது. பந்தல் முழுவதும் தீ பரவியதால் மக்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.

தீயில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கவலைக்கிடமாக இருந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக வாரணாசிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த நிலையில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளதாக பதோஹி மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: துர்கா பூஜையில் காந்தி சிலை அவமதிப்பு - அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details