தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தீ விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு - Venkatapur Fire broke out

தெலங்கானாவில் தீ விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

தீ விபத்தில் சிக்கி  6 பேர் உடல் கருகி உயிரிழப்பு
தீ விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு

By

Published : Dec 17, 2022, 9:44 AM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் மஞ்சரியாலா மாவட்டம் வெங்கடப்பூரில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று(டிசம்பர் 16) அதிகாலை ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டின் உரிமையாளர் சிவய்யா (50), அவரது மனைவி பத்மா (45), பத்மாவின் மூத்த சகோதரி மகள் மௌனிகா (23), மௌனிகாவின் இரு மகள்கள் மற்றும் மற்றொரு உறவினரான சாந்தய்யா ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறையினர் சம்பவயிடத்துக்கு விரைந்து தீயை போராடி அணைத்தனர். இதனிடையே அங்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஜம்மு: துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 2 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details