ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் விந்தியா எனும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று (டிசம்பர் 12) பிற்பகல் தொழிற்சாலையில் உள்ள உலை ஒன்று வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த 8 பேர் அப்பகுதிக்கு அருகே உள்ள பச்சுபள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவில் பயங்கர தீ விபத்து - 8 பேர் படுகாயம் - Sangareddy District Latest News
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் எட்டு பேர் படுகாயமடைந்தனர்.
தெலங்கானாவில் பயங்கர தீ விபத்து
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:உணவகத்தில் பயங்கர தீ விபத்து!