ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் கோகாதிபூர் பகுதியில் இயங்கு வரும் பட்டாசு ஆலையில், நேற்றிரவு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், நான்கு ஊழியர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். 100 விழுக்காடு உடலில் தீக்காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதில், மூவர் இன்று (பிப்.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து காரணமாக, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், அப்பகுதி மக்களின் உதவியோடு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிடைத்த தகவலின்படி, நான்கு ஊழியர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்கள் விருதுநகரை சேர்ந்த விஜய் குமார் (25), குமாரசாமி (58), சிவகாசியைச் சேர்ந்த விஜய் (22) ஆகியோர் ஆவார்கள். இந்நிலையில், விருதுநகரைச் சேர்ந்த பாண்டி சிவம்(28) என்பவர், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:இனியும் கோயில்களுக்கு யானைகள் தேவையா?