மும்பை அருகே பைகுல்லா பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை உணவகத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து! - மும்பை உணவகத்தில் தீ விபத்து
மும்பை அருகே உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்திற்குள் தீயை அணைத்தனர்.
Fire breaks out in Mumbai's Byculla area
இதுதொடர்பாகத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்தனர். அவர்கள் அரைமணி நேரத்திற்குள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அதிருஷ்வசமாக இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை.
மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இதுதொடர்பாகக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.