லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தின் கிருஷ்ணா விஹாரில் உள்ள குடிசைப் பகுதிகளில் நேற்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல குடிசைகள் எரிந்திருந்தாலும் யாரும் உயிரிழக்கவில்லை.
இந்த தீவிபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும், 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டன. நேற்று இரவு 10 மணியளவில் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல் துறையினரும் சம்பவ இடத்திற்குச் சென்று தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினர்.