டெல்லி: துவார்கா பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதற்குள் தீ மளமளவென பரவியது. அதனால், எட்டு தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில், இருவர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.