கட்டாக்: புவனேஸ்வரில் இருந்து ஹவுரா ஜன் சதாப்தி சென்ற விரைவு ரயில் இன்று (டிச.7) காலை கட்டாக் ரயில் நிலையம் வந்ததுள்ளது. அப்போது ரயிலில் இருந்த சில பயணிகள் ரயில் பெட்டியின் அடியில் தீப்பிடிப்பதைக் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், ரயிலில் ஏற்பட்ட தீயை அணைத்துள்ளனர். மேலும் ரயில் பெட்டியின் அடியில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரயிலில் ஏற்பட்ட விபத்து சரிசெய்யப்பட்ட நிலையில், சுமார் 45 நிமிடத்திற்குப் பிறகு கட்டாக் ரயில் நிலையத்தில் இருந்து ஹவுரா நோக்கி ரயில் கிளம்பியது. மேலும் இந்த தீ விபத்தானது இயந்திரக் கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும், தீ பிடித்த முதற்கட்டத்திலேயே சரிசெய்யப்பட்டதால் பெரும் அசம்பாவிம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.