புனே:மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள பேஷன் தெருவில் துணிகள், காலணி என 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைத் தெருவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 26) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில் கோடிக்கணக்கிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.