தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிவாண்டி நூற்பு ஆலையில் தீ விபத்து - நூற்பு ஆலையில் தீ விபத்து

மும்பை: பிவாண்டியில் உள்ள நூற்பு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Nov 13, 2020, 2:36 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டியைச் சேர்ந்த மன்சுக் ஜகாரியாக்கு சொந்தமான நூற்பு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்தத் தகவலின் பேரில், இரண்டு தீயணைப்பு வாகனத்தில் வந்த மீட்பு குழுவினர் குடியிருப்புவாசிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி தீயினைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.

இது தொடர்பாக தீயணைப்புத் துறை அலுவலர் கூறுகையில்,” ஆலைக்குள் பரவும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர இன்னும் 2 மணி நேரம் ஆகும். தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை”என்றார்.

தீ விபத்து

இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. நூற்பு ஆலை அமைந்துள்ள காம்பவுண்ட்டில் 40 முதல் 50 குடியிருப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பஞ்சு குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்!

ABOUT THE AUTHOR

...view details