தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து...! - ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

பெங்களூரு: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Fire
Fire

By

Published : Nov 10, 2020, 2:42 PM IST

கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்துள்ள பாபுஜி நகரில் தனியாருக்கு சொந்தமான ராசயன தொழிற்சாலை ஒன்று இயங்கிவருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று எதிர்பாரதவிதமாக தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே தீயானது தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதனால் அடர்த்தியான புகை அப்பகுதியில் எழுந்தது.

தீ விபத்து

இந்த தொழிற்சாலையானது அதிகம் மக்கள் வசிக்கும் பகுதியில் இயங்கி வருவதால் அங்கிருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுபடுத்த நிகழ்விடத்திற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த தீ விபத்தில் யாரும் பலியாகவில்லை. இந்த விபத்தால் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details