டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒன்பதாவது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அத்தளத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அத்தளத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பிரிவு இல்லை எனவும் ஆய்வகங்கள் உள்ளிட்டவை செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனையின் 9ஆவது தளத்தில் திடீரென தீ விபத்து இது குறித்து தகவலறிந்ததும், சுமார் 22 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக, டெல்லி தீயணைப்பு சேவை இயக்குநர் அதுல் கார்க் தெரிவித்தார்.
மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:'பொன்னூசல் ஆடாமோ' - மதுரை மீனாட்சி கோயிலின் ஆனி ஊஞ்சல் உற்சவம்