தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் அமைச்சரின் வீட்டில் திடீர் தீ விபத்து - fire at former minister's house in Kashmir ramban

ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் சவுத்திரி அஜாஸ் கானின் வீட்டில் நேற்று (நவம்பர் 16) இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சரின் வீட்டில் தீ விபத்து
முன்னாள் அமைச்சரின் வீட்டில் தீ விபத்து

By

Published : Nov 16, 2020, 8:12 AM IST

ஜம்மு : ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும், அம்மாநில அப்னி கட்சித் துணைத் தலைவருமான சவுத்திரி அஜாஸ் கானின் வீட்டில் நேற்று (நவம்பர் 16) இரவு 8 மணி அளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இதில் சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலானப் பொருட்கள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக முன்னாள் அமைச்சரும் அவரது, குடும்பத்தாரும் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அம்மாநில காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் இருந்த ஹீட்டர் மூலமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல் துறையின் முதற்கட்ட விசாரணயில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:

சத்தீஸ்கர்; தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட பெண் நீதிபதி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details