தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பை மருத்துவமனையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு - mumbai hospital

மும்பை: தானே மாவட்டம் கவுசா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.

தீ விபத்து
தீ விபத்து

By

Published : Apr 28, 2021, 7:35 AM IST

மும்பை மாநிலம் தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியில் அமைந்துள்ளது கவுசா பிரைம் மருத்துவமனை. இங்கு இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைப் போராடி அணைத்தனர்.

இருப்பினும் இவ்விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 17 பேரில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும்போது, இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

மும்பை மருத்துவமனையில் தீ விபத்து

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details