பாலிவுட்டில் நாஷா, தி ஜர்னி ஆஃப் கர்மா, மாலினி அண்ட் கோ உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ள பூனம் பாண்டா, சமூக வலைதளங்களில் சர்ச்கைக்குளான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமடைந்தவர். இவரின் இன்ஸ்டா கணக்கை மில்லியன் கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் பூனம் பாண்டா கோவில் உள்ள அணை ஒன்றில் நிர்வாணமாக நடனாமாடுவது போன்ற வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். பொதுவெளியில் இத்தகைய செயலில் ஈடுபட யார் அனுமதி கொடுத்தது என ட்விட்டர் வாசிகள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத், "பூனம் பாண்டேவின் வீடியோ கோவாவில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ கனகோனாவில் உள்ள சாப்போலி அணையில் படமாக்கப்பட்டது. இந்தப் பகுதி மிகவும் பாதுகாப்பானது மற்றும் கோவா அரசாங்கத்தின் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவா என்டர்டெயின்மென்ட் சொசைட்டி (ஈ.எஸ்.ஜி) அனுமதியளித்தால் மட்டுமே கோவாவில் படம்பிடிக்க முடியும். ஈ.எஸ்.ஜியின் தலைவராக முதலமைச்சர் தான் பதவி விகிக்கிறார். பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு கோவாவை ஆபாச இடமாக ஊக்குவித்து வருகிறது. இது மாநிலத்திற்கு கெட்ட பெயரைக் கொண்டுவருகிறது. அரசுக்குச் சொந்தமான இடத்தில் அரசு அலுவலர்களுக்கு தெரியாமல் எப்படி ஒரு நடிகையால் நிர்வாணமாக படம் பிடித்திட முடியும். முதலமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பிலிப் நேரி ரோட்ரிக்ஸ் உடனடியாக ராஜினாமா செய்திட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக நீர்வளத் துறை உதவி பொறியாளர் துணைப்பிரிவு, பணிப் பிரிவு அலுவலர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பூனம் பாண்டே மீது கோவா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:'ராஷ்மி ராக்கெட்' படப்பிடிப்பு தொடக்கம்: உற்சாகத்தில் டாப்ஸி