பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தார், கடந்த மாதம் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தாலிபான் அமைப்புடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்து வலதுசாரி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலையை கிளப்பியது.
ஜாவேத் அக்தார் ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறு பரப்புவதாகக் கூறி மும்பை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ் தூபே என்ற வழக்கறிஞர் ஜாவேத் அக்தாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.