மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் போலீஸ் கமிஷனராக இருந்தவர் பரம்பீர் சிங். இவர் மீது மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் பணப் பறிப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரபல தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 6 பேர் போலீஸ்காரர்கள் ஆவார். இந்த வழக்கில் அப்பகுதியை சேர்ந்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டனர்.
முன்னதாக பரம்பீர் சிங் அப்போதைய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் (தேசியவாத காங்கிரஸ்) மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுதொடர்பாக மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பரம்பீர் சிங் விவகாரம்- சரத் பவார் உண்மையை மறைக்கிறார்- சீறும் பட்னாவிஸ்!