மும்பை:பெண் காவலர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் பெண் காவலர் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக மூன்று பேர் மீது மேக்வாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், 'குற்றம்சாட்டப்பட்ட நபர் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர். இவருக்கும், பெண் காவல் ஆய்வாளருக்கும், சமூக வலைதளத்தின் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இருவரும் தங்களது நட்பினை வளர்த்துக் கொண்டனர்.
இந்நிலையில், அந்நபர் மும்பையில் உள்ள போவாய் பகுதிக்கு வந்து பெண் காவலரைச் சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.