தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பொதுத் துறை வங்கிகளில் சேவைக் கட்டணத்தை அதிகரிக்கவில்லை' - தனியார் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய கட்டணம்

டெல்லி: தனியார் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தை திரும்பப் பெறவும் அளிக்கப்பட்டுவந்த இலவச சேவையை நிறுத்தி சேவைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் துறை வங்கிகளில் சேவைக் கட்டணத்தை அதிகரிக்கவில்லை என நிதித் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வங்கி
வங்கி

By

Published : Nov 3, 2020, 7:04 PM IST

தனியார் துறையின் இரண்டு பெரிய வங்கிகளான ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கும், திரும்பப் பெறுவதற்கும் கட்டணம் வசூலிப்பதாக அவ்வங்கிகள் அறிவித்துள்ளன. இதேபோல், நவம்பர் 1 முதல் பாங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறிய பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சில கணக்குகளுக்கு மட்டும்தான் இந்தக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் வங்கிகள் பணத்தை டெபாசிட் செய்யவும், பணத்தை திரும்பப் பெறவும் அளிக்கப்பட்டுவந்த இலவச சேவையை நிறுத்தி சேவைக் கட்டணத்தை அதிகரித்துள்ளது. ஆனால், இத்தகைய சேவை கட்டணம் அதிகரிப்பு பொதுத் துறை வங்கிகளில் கிடையாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாங்க் ஆப் பரோடா வங்கி கூறுகையில், "கரோனா காலத்தைக் கருத்தில்கொண்டு, நவம்பரில் அமலுக்கு வந்த கட்டண சேவை அதிகரிப்பு உத்தரவு ரத்துசெய்யப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கார் விற்பனை உயர்வால் மகிழ்ச்சியடைய தேவையில்லை - ஆட்டோமொபைல் டீலர் சங்க தலைவர்

ABOUT THE AUTHOR

...view details