தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜூனியர் மாணவர்களை ரேகிங் செய்த சீனியர்களுக்கு ரூ.11 லட்சம் அபராதம்

அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்களை ரேகிங் செய்ததாக சீனியர்களுக்கு 11 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை அபராதமாக கல்லூரி நிர்வாகம் விதித்த சம்பவம் நடந்துள்ளது.

ஜூனியர் மாணவர்கள் ரேகிங்
ஜூனியர் மாணவர்கள் ரேகிங்

By

Published : Dec 11, 2022, 10:31 PM IST

டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ல அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு பருவத்திற்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்த கல்லூரியில் நடைபெறும் "ஒயிட் கோட் செர்மனி" விழா குறித்து விடுதியில் தங்கியிருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விளக்குவதாக கூறி சீனியர் மாணவர் ஒருவர் தன் அறைக்கு ஜூனியர்களை அழைத்துச் சென்று உள்ளார்.

இதனடிப்படையில் அங்கு சென்ற ஜூனியர் மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ஒன்றிணைந்து ரேகிங் செய்துள்ளனர். கோழிகள் போல் பாவணை செய்ய கட்டயாப்படுத்தி அதை வீடியோ காலில் மற்றவர்களுக்கு காட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி மாணவர்களுக்கு அபராதம் விதித்தனர். ரேகிங்கிற்கு மூளையாக செயல்பட்ட மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 மாதம் விடுதியை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டனர். அதோடு ரேகிங்கில் தொடர்புடைய 43 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:டெல்லி மதுபான வழக்கு: தெலங்கானா முதலமைச்சரின் மகளிடம் சிபிஐ விசாரணை

ABOUT THE AUTHOR

...view details