கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் வகையில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை மத்திய அரசு தொடர்ச்சியாக அறிவித்துவருகிறது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது கட்டமாக இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பில் புதிய வீடு வாங்குவோருக்கான வருமான வரிச் சலுகை, புதிய தொழில் ஆரம்பிப்பவர்களுக்கான ஊக்குவிப்பு தொகை, சிறிய நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, “இன்று அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு 3.0 திட்டத்தின் மூலம் அனைத்துத் துறைகளையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகி உற்பத்தி பெருக்கப்படும்.
மேலும் இந்த அறிவிப்பானது மக்களிடையே பணப்புழக்கத்தை உறுதி செய்யும். ரியல் எஸ்டேட் துறையை நிச்சயம் ஊக்குவிக்கும். விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வீடு வாங்க போறீங்களா... அப்போ உங்களுக்கு தான் இந்த சலுகை!