தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்ஜெட் 2021: நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல்

டெல்லி: 2021-22ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜன.29) தாக்கல் செய்கிறார்.

Finance Minister Sitharaman
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

By

Published : Jan 29, 2021, 11:07 AM IST

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. நிகழாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.29) தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பட்ஜெட் குறித்து உரையாற்றுகிறார். இதில், 2021-22ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

இந்த ஆய்வறிக்கை நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள பொருளாதார மேம்பாடு குறித்த சுருக்கத்தை வழங்குகிறது. மேலும் உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, விலைவாசி, ஏற்றுமதி, விவசாயம், உற்பத்தி, பண பரிமாற்றம், அந்நிய செலாவணி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் இடம்பெற்றிருக்கும்.

இந்த ஆய்வறிக்கை பொருளாதார வளர்ச்சி தொடர்புடைய கணிப்புகளை முன்வைக்கிறது. இந்த நிதியாண்டில் பொருளாதாரம் வேகமாக வளரும் (அ) வீழ்ச்சியடையும் என்பது குறித்த விரிவான காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 'மத்திய பட்ஜெட் 2021' மக்களவை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் 2020-21 பட்ஜெட் ஆய்வறிக்கையை சமர்ப்பித்த பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணியன் உரையாற்றவுள்ளார். ஜீரோ நேரம், கேள்வி நேரம் ஆகியவற்றுடன் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவையும், மாலை 4 மணி முதல் 9 மணி வரை மக்களவையும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பட்ஜெட் கூட்டத்தொடர்: இன்று தொடங்குகிறது முதல் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details