தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Budget Session 2023: நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் - economic survey 2022 23 highlights

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

By

Published : Jan 31, 2023, 1:04 PM IST

Updated : Jan 31, 2023, 1:59 PM IST

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல் உரையுடன் (இன்று 31) தொடங்கியது. முர்முவின் உரைக்கு பின் மதியம் 12.50 மணியளவில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது மக்களவையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த ஆய்வறிக்கையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2023-24 நிதியாண்டில் 6.8 சதவீதமாகவும், 2022-23 நிதியாண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கும். 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சியை எட்டும். அதேபோல 2023ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும்.

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரத்தில் 5ஆவது இடத்தை இந்தியா தொடரும். உலகளாவிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிக்கும். அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு குறையலாம்.

உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி பொருளாதாரத்துக்கு ஆதரவளித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 2ஆம் பாதியில் ஏற்றுமதியின் வளர்ச்சி மிதமாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சி கப்பல் போக்குவரத்து மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அதிகரிக்கலாம். கரோனா ஊரடங்குக்கு பிந்தைய பொருளாதார சவால்களை வளர்ந்த பொருளாதார நாடுகளை விட, அசாதாரணமான இந்தியா எதிர்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:எனது அரசாங்கம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களின் அதிகாரத்தை கட்டியெழுப்பியுள்ளது - திரௌபதி முர்மு

Last Updated : Jan 31, 2023, 1:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details