டெல்லி:நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முழு பட்ஜெட் இதுவாகும்.
அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெறுவதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். நடுத்தர மக்கள் எதிர்பார்த்தது போல மத்திய பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகர அறிவுப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
நாடு முழுவதும் 157 நர்சிங் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். மேலும் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகே அறிவிக்கப்பட்ட 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் இதன் மூலம் பவ்வேறு நிர்வாக சிக்கல்களை தவிர்க்க முடடியும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தனி நபர் வருமானம் அதிகரித்து உள்ளதாக கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சராசரியாக ஒரு லட்சத்து 97 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் உலக பொருளாதரத்தில் 10 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாக தெரிவித்தார்.