ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வீர மரணம் அடைந்த ஜவான்களுக்கு அக்ஷய் குமார், வருண் தவான், ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்கள் சமூகவலைதளங்களில் அஞ்சலி செலுத்தினர்.