ராய்ச்சூர்:கர்நாடகா மாநிலத்தில் கிழிந்த 20 ரூபாய் நோட்டுக்காக இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மல்லம்மா எனும் பெண்மணி கீதா பாளையத்தில் கடை வைத்து நடத்தி வந்தார். மல்லம்மாவின் கடைக்கு அதே பகுதியை சேர்ந்த ருக்கம்மா என்பவரின் மகள் பொருள் வாங்க சென்றுள்ளார். அப்போது, கடைக்கு வந்த சிறுமியிடம் மல்லம்மா மீதி சில்லரையாக கிழிந்த 20 ரூபாய் நோட்டு கொடுத்துள்ளார்.
மகள் வீட்டிற்கு வந்ததும் இதனை அறிந்த ருக்கம்மா கடைக்கு சென்று மல்லம்மாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.