தோஹா: ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. லீக், கால்இறுதி, அரையிறுதி ஆட்டங்கள் நிறைவுபெற்ற நிலையில், கிளைமாக்ஸான இறுதிப்போட்டி இன்று(டிச.18) இரவு நடைபெறுகிறது.
1986ஆம் ஆண்டுக்குப் பின் உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றிருக்காத நிலையில், இந்த ஆட்டத்தின் வெற்றி பெற்று மீண்டும் ஒரு முறை உலக கோப்பையை தன் வசப்படுத்த அந்த அணி முயற்சிக்கும்.
அதேநேரம் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியும் தொடர்ச்சியாக இரு முறை கோப்பையை வென்ற 2-வது அணி என்ற சிறப்பை பெற முயற்சிக்கும். இதற்கு முன் பிரேசில் அடுத்தடுத்து இரு முறை உலக கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்துடன் நட்சத்திர வீரர்கள் மெஸ்சி, லுயிஸ் சூராஸ், ரோபட் லீவாண்ட்வுஸ்கி, லுகா மோட்ரிக், மானுயேல் நியூவர் ஆகியோர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதால் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க அனைவரும் முயற்சிப்பர். அதனால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
அர்ஜென்டினா அணிக்காக கடைசி ஆட்டத்தில் மெஸ்சி களமிறங்க உள்ளதால் கோப்பையை வென்று அவருக்கு பரிசளிக்க அந்த அணி வீரர்கள் கடுமையாகப் போராடுவார்கள்.
அதேநேரம் கடந்த 44 ஆண்டுகளில் உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென் அமெரிக்க அணிகளுடன் தோல்வியைக் கண்டிராத பிரான்ஸ் அணி இந்த ஆட்டத்திலும் வரலாறு படைக்குமா என ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர். அர்ஜென்டினா அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணி வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்புகள் உலா வருவதால் ரசிகர்களிடையே கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 08.30 மணிக்கு இன்றைய இறுதி ஆட்டம் தொடங்குகிறது.
இதையும் படிங்க:FIFA World Cup: மொராக்கோவை வீழ்த்தி மூன்றாவது இடம் பிடித்த குரோஷியா!