டெல்லி:இதுகுறித்து மாநிலங்களவையில் இன்று (டிசம்பர் 14) மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நாடு முழுவதும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பை தொடரும் மாணவிகளை ஊக்குவிக்க, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மாணவிகளுக்கென சிறப்பு முதுகலை உதவித்தொகைகளை வழங்குகிறது.
இதேபோல், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) தொழில்நுட்பக் கல்வியில் சேரும் 10,000 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குகிறது. இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் மாணவிகளின் சேர்க்கையை மேம்படுத்த, கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் 2016ஆம் ஆண்டு 8 சதவீதமாக இருந்த மாணவிகளின் சேர்க்கை, 2021-22ஆம் ஆண்டு 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.