கொல்லம்: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) நடைபெற்றது. நீட் தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேர்வு மையத்திற்குள் செல்லும் முன்பு, தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யப்படுவர். பெண் தேர்வர்கள், மூடப்பட்ட அறையில் பெண் அலுவலர்களைக் கொண்டு சோதனை செய்யப்படுவர். இதுபோன்ற சோதனைகளுக்குப் பல ஆண்டுகளாக பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் தேர்வெழுதச்சென்றுள்ளார். அவரை சோதனை செய்த பெண் அலுவலர்கள் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.