ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள மகாராஜா கங்கா சிங் பல்கலைக்கழக துணைவேந்தர் வினோத் குமார் சிங்கும், பேராசிரியர் அனில் குமார் சங்கானி உள்ளிட்ட சிலரும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக அதே பல்கலை பெண் பேராசிரியர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஜா கங்கா சிங் பல்கலை துணைவேந்தர் மீது பாலியல் புகார் - மகாராஜா கங்கா சிங் பல்கலைக்கழக பெண் பேராசிரியர்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மகாராஜா கங்கா சிங் பல்கலைக்கழக பெண் பேராசிரியர் ஒருவர் தன்னை துணைவேந்தரும், பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலரும் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார்.
Maharaja Ganga Singh University
அதோடு பிகானேர் போலீசாரிடம் ஐந்து பக்கங்கள் கொண்ட புகாரை அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் துணைவேந்தர் வினோத் குமார் சிங் உள்ளிட்ட நான்கு பேர் மீது ஐபிசி பிரிவு 354 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முழுவிவரங்கள் வெளியாகவில்லை. போலீசார் விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு