தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அடையாளம் தெரியாத நபருக்கு இறுதி சடங்கு செய்த பெண் காவலர்! - Female constable cremates body

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் உடலுக்கு 25 வயதே ஆன பெண் காவலர் இறுதி சடங்கு செய்துள்ளார்.

பெண் காவலர்
பெண் காவலர்

By

Published : Apr 18, 2021, 4:34 PM IST

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கால்வாய் அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கோசி காலன் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் ஷாலினி வர்மா என்ற காவலர், அடையாளம் தெரியாத அந்த இளம் பெண்ணின் உடலுக்கு இறுதி சடங்கு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அழுகிய நிலையில் காணப்பட்ட அந்த உடலின் அடையாளத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை. இறந்த அனைவரின் உடலுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்" என்றார். முன்னதாக, இறுதி சடங்கு செய்ய முயன்ற காவலரை மயானத்தில் இருந்த பூசாரி தடுத்து நிறுத்தியுள்ளார். இருப்பினும், அந்த பெண் காவலர் அவருக்கு இறுதி சடங்கு செய்து மனித நேயத்தை பறை சாற்றியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details